தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/கடவுளுடன் இருப்போம்

கடவுளுடன் இருப்போம்

கடவுளுடன் இருப்போம்


ADDED : ஏப் 20, 2011 01:04 PM

Google News

ADDED : ஏப் 20, 2011 01:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம் கடவுளை விட்டு விலகும் தன்மை கொண்டது. எனவே, தீய உள்ளம் எவருக்கும் ஏற்படாதபடி இறையுணர்வுடன் நடக்க வேண்டும்.* கடவுளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, கடவுளின் பணியை இன்னும் அதிகமாக செய்யுங்கள்.* முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.* 'எப்போதும் நாம் கடவுளோடு இருப்போம்'. இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.* நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாகவும், தீமை என்றால் என்ன என்றே தெரியாதவர்களாகவும் சமுதாயத்தில் இருக்க வேண்டும்.* அழிந்து போகும் உணவுக்காக உழைக்காமல், நிலைத்த வாழ்வு தரும் பக்தி என்ற அழியாத உணவுக்காகவே உழைக்க வேண்டும்.* மனவலிமை கொண்ட நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.- பைபிள்



Trending





      Dinamalar
      Follow us